இருட்டில் எடுக்கப்பட்ட குருட்டு முடிவுகள்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டமைக்கு கடுமையான எதிர்ப்பலைகள் கடல் கடந்தும் கிளம்பியுள்ளன. அகற்றப்பட்டமைக்கு பல்கலைக்கழக நிர்வாகம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஆகியன விளக்கமளித்துள்ளன.