இலங்கையின் இராஜதந்திரம்

(திருஞானசம்பந்தன் லலிதகோபன்)

சீனாவின் கொரோனா தடுப்பு மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.சீனாவின் உலக முதல்வன் நிலைக்கான இன்னோர் அங்கீகாரம்.அமெரிக்கா தலைமையிலான மேற்குசார் கேந்திரம் மெல்ல மெல்ல வலுவிழந்து , சீனா தலைமையில் கிழக்கு சார் உலகமொன்று கட்டியெழுப்பப்படுவதை காணலாம்.விரைவில் சீனாவின் யுவான் நாணயமும் சர்வதேச நாணயமாக அங்கீகாரம் பெறலாம்.
நெடுந்தீவில் சீனா, கிழக்கு முனையத்தில் சீனா என தமிழ் அரசியல்வாதிகள் போல கூப்பாடு போடாமல் இதற்கு பின்னாலுள்ள சீனாவின் உழைப்பினை நாங்கள் நுணுகி பார்க்க வேண்டும்.சோவியத்தின் வீழ்ச்சிக்கு பின்னரான தொண்ணூறுகளின் ஆரம்ப பகுதிகளிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட” நவீன சீனா” கருத்தியல் ஓடு போடும் அளவிற்கு வந்துள்ளது.