இலங்கை : ஒருபுறம் வேடன், மறுபுறம் நாகம்!

(வி. சிவலிங்கம்)

சீனா – இலங்கை – அமெரிக்கா

இலங்கை மிகப் பெரும் நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. ஒரு புறத்தில் ‘கொரொனா’ தொற்று நோயின் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில் ஏற்கனவே மிகவும் பாதிக்கப்பட்டிருந்த பொருளாதாரம், மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. நாட்டின் செலவினங்களைச் சமாளிப்பதற்கு உள்நாட்டு வருமானம் போதியதாக இல்லை. உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதுடன், இறக்குமதியும் தடுக்கப்பட்டுள்ளதால் நிலமை மோசமான நிலையிலுள்ளது.