‘ஒரே நாடு ஒரே சட்டம்’

.இந்தியாவில் கடும் எதிர்ப்புக்கிடையே ஒலித்த இந்தக் குரல் இப்போது இலங்கையில் எதிரொலிக்கிறது. கோத்தபய ராஜபக்ஷேவின் புதிய ஆயுதம் இந்த ‘ஒரே நாடு ஒரே சட்டம்’. அதை ஆராய்ந்து செயற்படுத்த ஒரு குழு அமைத்திருக்கிறார் கோத்தபய. அதன் தலைவர் பொதுபல சேனா அமைப்பின் தலைவரும், பௌத்த சாமியாருமான கலகொட அத்தே ஞானசரா தேரா.