காலி சம்பவம் தொடர்பில் 19 பேர் கைது

காலி ஜின்தோட்ட பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் இதுவரையிலும் 19 பேரை கைதுசெய்துள்ளதாக தெரிவித்த பொலிஸ் தலைமையகம், அங்கு பாதுகாப்பு கடமைகளுக்காக விசேட அதிரடிப்படையினர் 100 பேர் உள்ளிட்ட 300 பேர், நிறுத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது. ஹிங்தோட்ட விதானகொட பகுதியில், கடந்த 16ஆம் திகதியன்று இரு குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து, வெ ளி பிரதேசங்களைச் சேர்ந்த சிலர், ​நேற்றிரவு தாக்குதல்களை மேற்கொண்டனர் என்றும் அறியமுடிகின்றது. சம்பவத்தையடுத்து பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அந்த ஊரடங்கு சட்டம் இன்னும் அமுலில் இருப்பதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.