குலம் அக்காவின் இழப்பு

இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு அளப்பெரிய பங்களிப்புச் செய்த குலமக்கா ( குருநகர், யாழ்ப்பாணம்.) குறித்த நினைவுகள் பலராலும் முகநூல் வாயிலாக வெளியிடப்பட்டு வருகிறது.

இப் பூவுலகில் 84 வருடங்கள் வாழ்ந்த அவரது குடும்பம் மிதவாத தமிழ் அரசியல் பரப்பிலும், விடுதலைப் போராட்ட இயக்க அரசியல் பரப்பிலும் செய்த பணிகள் ஏராளம்.

இன்று அவரது பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற போது கட்சி வேறுபாடு இன்றி, இயக்க வேறுபாடு இன்றி வந்தவர்களைக் கண்டேன்.

தமிழ் தேசியப் போராட்டக் களத்தில் செல்விருந்தோம்பி,வருவிருந்து பார்த்திருந்த பண்பாளர் குடும்பம்.

அவரது கணவர் வேதநாயகம் எனது தந்தையாருடன் மிகுந்த நட்புறவு பாராட்டிப் பழகிய ஒருவர்.வேசமற்ற நேசம் அது.

குலமக்காவின் இறுதி நிகழ்வு 16.07.2019 செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ் கடற்கரை வீதியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லோருக்கும் பொதுவான இறைவனை வேண்டுகிறேன்.

(வேதநாயகம் தபேந்திரன்)