கொரனா இனி மெல்லச் சாகும்……!

(சாகரன்)

நாம் எல்லோரும் மகிழ்வுடன் வரவேற்கும் செய்தி இது. வெறும் நம்பிக்கையை ஊட்டும் செய்தி மட்டும் அல்ல இது. ஒரு வரலாற்றுப் போக்கின் அவதானிப்பில் இருந்து உருவான செய்தியாகும். மனித குலத்தின் இருப்பிற்கும், மேம்பாட்டிற்கும் இது அவசியமானதும் கூட. இது போன்ற ஒரு செய்தியை 2014ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் நாம் உலகிற்கு சொல்லி இருந்தோம்.