கொரனா இனி மெல்லச் சாகும்……!

ஆம் அந்த விஞ்ஞான பூர்வமான செய்தி உண்மை ஆக்கப்பட்டதே வரலாறு. அன்று மேற்று ஆபிரிக்க நாடுகள் எபோலா என்ற உயிர் கொல்லி நோயால் பீடிக்கப்பட்டு உலக சுகாதார நிறுவனங்கள், பல வளர்ச்சியடைந்த நாடுகளின் மருத்துவக் குழுக்களினால், செயற்பாடுகளினால் கட்டிற்குள் கொண்டு வர முடியாமல் தினம் தினம் மரணங்களை தமதாக் கொண்டு நகர்ந்து கொண்டிருந்தன மேற்று ஆபிரிக்க வறிய நாடுகள்.

இந்நிலையில் கியூபா இன் 460 பேர்களைக் கொண்டு மருத்துவக்குழுவுடன் தனது சேவையிற்காக மேற்கு ஆபிரிக்க நாட்டில் கால் பதித்தது. சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பதால் தள்ளி வைக்கப்பட்ட இந்த நாட்டை எபோலாவின் நோய் பரவலின் உச்சத்தின் பின்னே சர்வ தேச சமூகம் அங்கு செல்ல அனுமதித்தது.

இந்த தடைத் தாமதத்தை, தவிர்ப்பை அவமதிப்பை கியூப மனிதானிமானம் ஒரு பொருட்டாக கருதாமல் மனித குலத்தை காப்பதே தனது மருத்துவக் கண்டு பிடிப்பின் ஒரே நோக்கம் என்று திடசங்கற்பம் பூண்டு தன்னை தடை செய்த நாட்டின் மக்களாக இருந்தாலும் பறவாய் இல்லை என்று ஒரு உன்னத நோக்குடன் செயற்பட வைத்தது.

மிக எளிமையாக ஆர்பாட்டம் அல்லாமல் மேற்கு ஐரோப்பாவில் தரையிறங்கி (புகைப்படம் 2) தனது பணிகளை ஆரம்பித்து மிகக் குறுகிய காலத்தில் தமது உயிர்களைக் கூடப் பொருட்படுத்தாமல் எபோலா உயிர் கொல்லிப் பரவலைக் கட்டிற்குள் கொண்டு வந்து விட்டு பிரதி உபகாரம் பாராமல் தனது நாட்டிற்கு திரும்புவதற்கான தலமையை கொடுத்தது அன்று எம்முடன் வாழ்ந்த கியூப அதிபர் பிடல் காஸ்ரோ.

இன்று அவர் காட்டிய வழியில் அந்நாட்டு அரசியல் தலமையின் பணிப்பின் பேரில் 2020 மார்ச் 22 ம் திகதி இத்தாலியில் தமது 52 மருத்துவ நிபுணர்களுடன் களம் இறங்கியுள்ளது(புகைப்படம் 1). இத்தாலியில் கொரனாவின் தாக்கம் தீவிரம் அடைந்த போது ஐரோப்பிய ஒன்றியத்திடம் கேட்கப்பட்ட உதவிகள் மறுக்கப்பட அதனை நிறைவேற்றி வைத்தது சீனா சில தினங்களுக்கு முன்பு.

நேற்றை தினம் ரஷ்யா தனது உதவிகளை தரை வழியாக அனுப்பியுள்ளது. தற்போது இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற் போல் கியூபா தனது மருத்துவக் குழுவுடன் தனது மனிதாபிமான செயற்பாட்டிற்காக தரையிறங்கி இருக்கின்றது.
உலகம் முழுவதும் கொரனாவின் தாக்கம் பரவி இருந்தாலும் இந்தாலியில் ஏற்பட்டிற்கும் பரவலே மனிதகுலத்தை நடுங்க வைத்திருக்கின்றது. இத்தாலியின் கட்டுப்பாடற்ற ஆரம்ப செயற்பாடுகள், இந்த நோய்ப் பரவலுக்கு அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் வயதில் மூத்தவர்கள் என்பதினால் மரணம் அதிகம் என்றும் தகவல்கள் கூறி நிற்கின்றன.

இந்த அகோரத் தாக்கம் தினமும் குறைந்த பாடில்லாமல் இருப்பது இதனைக் கட்டுப்படுத்த முடியுமா….? என்ற கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில் கியூப மருத்துக் குழுவின் களம் இறங்கிய செயற்பாடுகளானது 2010 டிசம்பரில் கெயிட்டியில் கொலராவை கட்டிற்குள் கொண்டு வந்தது, 2014 டிசம்பரில் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் எபோலாவை கட்டிற்குள் கொண்டு வந்தது போன்ற வரலாற்று செய்திகள் இங்கு இத்தாலியிலும் எங்கள் கியூபா மனித குலத்தை காப்பாற்றும் என்ற நம்பிகை வலுவாக்கி நிற்கின்றது.

எனவேதான் சொல்கின்றோம் ‘கொரனா இனி மெல்லச் சாகும்…..!” என்று.

சீனாவில் முதலில் அறியப்பட்டு அடங்காது என பலராலும் பேசப்பட்ட இடத்தில் சீன அரசின் துரிந்த செயற்பாடும் இதற்கு எந்த அளவிலும் குறைவில்லாத கியூப மருத்துக்வக் குழுவின் செயற்பாடும்தான் அங்கு இதனைக் கட்டிற்குள் கொண்டு வந்தது என்பதை முதலில் உலக மக்களுக்கு உரத்துக் கூறியது சீனாதான் கியூபா அல்ல. கியூபா தன்னடக்கத்துடனேயே என்றும் போல் இருந்தது.

உலகம் உடனே இதனைத் திரும்பிப் பார்க்கவில்லை. பிரதான் ஊடகங்களும் இந்த வரலாற்றை மறைக்கவே முற்பட்டன. ஏன் இன்றும் முயலுகின்றன. ஆனால் கொரனாவின் கோர நிலமைகளை உலகின் மூலை முடுக்கெல்லாம் விபரீத எல்லைகளை தொடுவது போல் நகரும் போது இச்செய்தி பிரதான செய்தியாக மனிதாபிமானம் மிக்கவர்களால் சமான்ய பொது மக்களால் பார்க்கப்பட்டது…. நம்பப்படுகின்றது பரப்பப்படுகின்றது.

இதனாலேயே இன்று அது இத்தாலியிற்கு கியூப மருத்துவக் குழுவை உலகம் அனுமதித்தது…. அழைத்தது. இது கியூபாவின் மனிதாபிமானத்தை மருத்துவ நிபுணத்துவத்தை மனித குலத்திற்கு தொடர இன்னொரு வாய்ப்பைக் கொடுத்துள்ளது என்றால் மிகையாகாது.

இதற்கு வலு சேர்த்ததாக அமைந்த அண்மைய விடயத்தையும் இவ்விடத்தில் குறிப்பிட்டே ஆகவேண்டும். பிரித்தானிய பிரஜைகள் நிரம்பிய உல்லாசப் கப்பலை கொரனாவின் தாக்கத்திற்குள்ளான காரணத்தால் நடுக்கடலில் தத்தளிக்க விட்டது சர்வதேச சமூகம். ஆனால் கியூபா இந்த பயணிகளுடனாக கப்பலை தானாக சுயமாக தனது தரையிற்கு இரு கரம் நீட்டி அரவணைத்து இறங்குமிடம்(புகைப்படம் 4) வழங்கியது. பின்பு தங்குமிடமும்… சிகிச்சையும்… வாழ்வைவும் தற்போது அளித்து வருகின்றது.

இந்த மனித நேய செயற்பாடு கியூபாவை யாரும் நிராகரிக்க முடியாத நிலையில் உயரத்திற்கு கொண்டு சென்று விட்டது. இதனையும் மீறி கியூபாவை நிராகரிப்பவன் மனிதனும் இல்லை……! மனித குல இருப்பிற்கு ஆதரவானவனும் இல்லை. இங்கு மனிதநேயமே மனிதத்தை வென்றுள்ளது. இச்சம்பவமும் கியூபாவை அங்கீகரித்து ஒன்றைத் தொடர்ந்து மற்றொன்றாக இந்தாலியில் செயற்படுவதற்கான காரணமாகி நிற்கின்றது.

தற்போது முடியாது…. நிறுத்தவே முடியாது…. இந்தக் கொரனாப் பரவலை …மரணத்தை…. என்ற நிலையில் தனது புள்ளி விபரத்தைக் காட்டிநின்ற இத்தாலியில் இந்தாலிய மக்களை கியூப மருத்துவக் குழு கெயிட்டியில்(புகைப்படம் 3) சாதித்ததை போல்….. மேற்கு ஐரோப்பில் சாதித்ததை போல்….. இனிவரும் நாட்களில் இந்தாலியில் அது சாதிக்கும். இது மனித குலத்தின் விஞ்ஞானபூர்வமான நம்பிக்கை. உண்மையாகும் நம்பிக்கை.

இனி இத்தாலியில் கொரான மெல்லச் சாகும்…. அது உலகம் முழுவதும் கொரனாவை மெல்லச் சாவதை ஆரம்பித்து வைக்கும்.

ஆனால் கியூபாவின் அருகில் உள்ள அமெரிக்கா மட்டும் இந்த மனித நேயத்தை வரவேற்க தயங்கி ஈகோவிடம் சிக்கித் தவிக்கும் ஆனாலும் கியூபா அமெரிக்க மக்களுக்கும் தனது மனித நேய மருத்துவத்திற்கு தயார் நிலையில்தான் எப்போதும் இருக்கும்