கொரனா வைரஸ் இன் வீச்சு… ஏப்ரல் மாத நடுப் பகுதியில் அடங்க ஆரம்பிக்குமா……?

(சாகரன்)

கொரனா வைரஸ் 2019 கடைசி மாதத்தில் சீனாவில் அறியப்பட்டதாக செய்திகள் கூறி நிற்கின்றன. சீனா இந்த வைரசின் வீரியத்திற்குள் அறியப்பட்ட நாளில் இருந்து முதல் ஒரு மாதத்திற்குள் மிக மெதுவாகவே பரவத் தொடங்கியது. அதாவது டிசம்பர் 3 வது கிழமையில் இருந்து ஜனவரி 3 வது கிழமை வரை அதிக பாய்ச்சலைக் காட்டவில்லை. ஆனால் ஜனவரி 3வது கிழமையிலிருந்து பெப்ரவரி 3 வது கிழமை வரை தனது காட்டத்தைக் காட்டி இதன் பின்பு தனது தணிதலை மெது மெதுவாக காட்டி இன்று கட்டுப்பாட்டிற்குள் வந்திருக்கும் நிலையை அடைந்திருக்கின்றது எனலாம்.