சந்தர்ப்பத்தை சாதனையாக்கும் சூத்திரத்தை தேடாது தேர்தல் சூதாட்டத்தில் உருளுகிறதுதமிழ்த் தேசியம்

(அ.வரதராஜா பெருமாள்)


கடந்த 9ந்திகதி ஈழநாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான யாழ்ப்பாணத்தின் ஒருபிரபல பத்திரிகையின் உரிமையாளரின் அறிக்கையைப் பார்த்தேன். அது என்னை பின்வருமாறு எழுதத் தூண்டியது.
அரசியல் யாப்பின் 13வது திருத்தம் முறையாகவும் முழுமையாகவும் நிறைவேற்றப்படுகின்ற நிலைமையை உருவாக்கவேண்டும். அதற்கு தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயற்படவேண்டும் எனநாம் கோரியபோதெல்லாம் – அதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உள்ளிடங்கலாக தமிழர்கள் மத்தியில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் இணைத்த ஒன்றுபட்ட தமிழர் மக்கள் அரங்கம் ஒன்றை உருவாக்க முயற்சித்த வேளையில்,