சீனாவின் காலில் விழுந்தார் ட்ரம்ப்!

இதற்குக் காரணம் அமெரிக்காவில் இப்பொழுது கொரனோ வைரசால் இறந்தோர் தொகை 1300 ஆக அதிகரித்துள்ளதோடு, நோய்த் தொற்றுக்குள்ளானோரின் தொகையும் 85000 ஆக அதிகரித்துள்ளது.

ஆரம்பத்தில் கொரனோ வைரஸ் சீனாவைக் கடுமையாகத் தாக்கியபோது, அமெரிக்க வர்த்தக அமைச்சு 26.01.2020இல் பின்வருமாறு கூறி உலக மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது:
“கொரனோ சீனாவைத் தாக்கியது ஒரு வகையில் நன்மையானதே. இனிமேல் அமெரிக்காவின் தொழில் வாய்ப்புகள் பிரகாச நிலையை அடையும்”.

அதே அமெரிக்காதான் இப்பொழுது தனது வாசல்படியை கொரனோ கடுமையாகத் தட்டத் தொடங்கியதும் சீனாவின் உதவியை நாடி நிற்கிறது. எப்படியிருக்கிறது முதலாளித்துவத்தின் வெட்கங்கெட்ட செயல். அமெரிக்கா சீன உதவியை நாடியது குறித்து ட்ரம்ப் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்:

Donald J.Trump
@realDonaldTrump

Just finished a very good conversation with president Xi of China. Discussed in great detail the Corona Virus that is ravaging large parts of our Planet. China has been through much & has developed a strong understanding of the virus. We are working closely together. Much respect.
1.19 AM – Mar.27, 2020