சுடு தேநீரும் சுடலை ஞானமும்

பௌத்த பேரினவாதம், இந்து மக்களிடம் கோரிய ஒற்றுமை, எத்தகையது என்பதைக் கடந்த வாரம், கன்னியா நிகழ்வுகள் உணர்த்தி இருக்க வேண்டும். காலச்சக்கரம் மெதுமெதுவாக நகர்ந்து, கல்முனையில் இருந்து கன்னியா நோக்கி வந்துள்ளது. கல்முனையில் களமாடியவர்களே, கன்னியாவிலும் களமாடினார்கள். கல்முனையில் பேசிய அதே குரல்கள்தான், கன்னியாவிலும் பேசின.