ஜம்மு – காஷ்மிர்: இந்தியாவின் வஞ்சனையும் எதிர்காலமும்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
உரிமைப் போராட்டங்கள், காலக்கெடு வைத்து நடத்தப்படுவதில்லை. சில பின்னடைவுகள், விடுதலைப் போராட்டங்களை முன்னரிலும் பார்க்க வேகமாக முன்தள்ள உந்தும். உரிமைக்கான குரல்கள், ஏன் எழுகின்றது என்பதை, அதிகாரம் எப்போதுமே விளங்கிக் கொள்வதில்லை. அதனாலேயே காலப்பொருத்தமற்ற, அபத்தமான அதேவேளை, ஆபத்தான முடிவுகளை அது எடுக்கிறது. இவ்வாறான முடிவுகள், பலத்தின் குறியீடல்ல; பலவீனத்தின் குறியீடு.