தமிழகத் தேர்தல் முடிவுகள்

(சாகரன்)

திராவிடக் கட்சிகளின் தேர்தல் வெற்றியை நிறுவி நிற்கும் முடிவுகளை தமிழகத் தேர்தல் முடிவுகள் காட்டி நிற்கின்றது. 1967 ஆரம்பித்த இந்த பணம் இரு வேறு முகாங்களாக எம்ஜிஆர் தி.மு.க இல் இருந்து பிரிந்து அ.தி.மு.க ஆரம்பித்த நாட்களில் இருந்து பயணப்பட்டாலும் அடிப்படையில் இரு திராவிட பாரம்பரிய சித்தாந்த செயற்பாட்டின் பயணப்பாட்டுடன் நகர்ந்த வரலாற்றை இந்த தேர்தல் முடிவும் காட்டி நிற்கின்றது.