தமிழர்களைவிட ஆந்திராவில் காவிகளை கதற விட்ட தெலுங்கர்கள்

25ல் 18 தொகுதிகளில் பாஜகவை முந்திய நோட்டா!👌

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியானது. அதில் பாரதிய ஜனதாக கட்சி பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்தது. எனினும், ஆந்திரா, கேரளம், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பாஜக 1 தொகுதிகளில் கூட வெற்றிபெற முடியவில்லை. குறிப்பாக, ஆந்திராவில் பாஜக போட்டியிட்ட 24 தொகுதிகளில், 18 தொகுதிகளில் நோட்டா பெற்ற வாக்குகளை விட குறைவான பெற்று தோல்வியைத் தழுவியுள்ளது. வாக்கு சதவீதத்தை குறிப்பிடுகையில் நோட்டாவை விட பாஜக குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளது, அதிக பட்சமாக அரக்கு தொகுதியில் 17,867 வாக்குகளை பாஜகவும், 47,977 வாக்குகளை நோட்டாவும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.