தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி உள்ளுராட்சி தேர்தலில் வடக்கு கிழக்கில் போட்டி

தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி உள்ளுராட்சி தேர்தலில் வடக்கு கிழக்கில் போட்டியிடுவதாக முன்னாள் வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபையின் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப்பெருமாள் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு என்று தெரிவு செய்த பகுதிகளில்ட மாத்திரம் போட்டியிடுவதாக தெரிவித்தார். சில பகுதிகள் அப் பிரதேச மக்கள் தமக்கு ஒரு சுயேச்சைக் குழுக்களை அமைத்து போட்டியிடுகின்றனர்.  கிராம பிரதேச ஒற்றுமையை கருத்தில் கொண்டு அப்பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அப் பிரதேசங்களில் தமிழர் சமூக ஜனநாயக் கட்சி (SDPT)போட்டியிடுவதை தவிர்த்து வருவதாகவும் அறிய முடிகின்றது.

(காணொளியை பார்க்க…)