தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் வரலாற்றுத் தடமும்

(கருணாகரன்)

“ஜனாதிபதித் தேர்தலைப் பற்றிச் சம்மந்தன் வாய் திறக்காமல் இருக்கிறாரே. கூட்டமைப்பு என்ன முடிவெடுக்கப்போகிறது?”

இப்படியொரு எதிர்பார்ப்பையும் பெரிய கேள்வியையும் தன்னைச் சுற்றி உருவாக்கியிருக்கிறார் சம்மந்தன். தனிப்பட்ட ரீதியிலான பேரத்துக்குரிய வித்தைகள் சம்மந்தனுக்குத் தெரியும். இந்த வித்தைகளை அவர் தமிழ் மக்களுடைய நலன்களுக்காகச் செய்வதில்லை. இதைப்பற்றித் தனியாக இன்னொரு சந்தர்ப்பத்தில் பேசவேண்டும்.