தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனான ஜனாதிபதியின் சந்திப்புக்குக் காரணம்

(லக்ஸ்மன்)

தமிழ்த் தேசிய கூட்டமைப்பை ஜனாதிபதி சந்திப்பதானது, ஒருபடி கீழிறங்கலாகவே பார்க்கப்படவேண்டும். இதனை தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சந்திக்கிறார் ஜனாதிபதி என்றும் ஜனாதிபதியைச் சந்திக்கிறது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்றும் இன்னும் பலவாறும் பொருள் கொள்ளலாம். எவ்வாறு பார்த்தாலும், நடைபெறவுள்ளது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்புதான். சந்திப்புக்கே இரண்டுக்கு மேற்பட்ட வகைகளில் விளக்கம் கொடுக்கமுடியுமென்றால், சந்திப்பு எவ்வாறான விடயங்களை உள்ளடக்கியிருக்கும் என்பதற்கும் பல வியாக்கியானங்களைக் கொடுக்க முடியும்.