தமிழ் அரசியலும் தெரிவுச் சுமையும்: யாரைத்தான் தெரிவு செய்வது?

(என்.கே. அஷோக்பரன்)

வாக்களிப்பு என்பது, நமது முழு ஜனநாயகக் கட்டமைப்புக்கான அடித்தளமாக விளங்குகின்றது. வாக்களிப்பது என்பது, நமது ஜனநாயகத்தின் மிகமிக அடிப்படையான உரிமை என்று நாங்கள் நினைக்கிறோம். ஒரு குடிமக்கள் குழு, அதன் பிரதிநிதிகளைத் தமது வாக்குகளினூடாகக் கூட்டாகத் தேர்ந்தெடுக்கும்போது, ​​சுதந்திரமான தேர்வின் மூலம், நாம் நம்மை ஆளுகிறோம் என்ற கருத்தை அது உறுதிப்படுத்துகிறது.