தமிழ் அரசியல் கட்சிகளின் தலைகீழ் நிலை!

(Maniam Shanmugam)

இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்களின் தேசிய உரிமைகளைப் பெறுவது சம்பந்தமாக கருத்துச் சொல்லும் தமிழ் தேசியர்கள் பலர், “தமிழ் அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமை இல்லாததால்தான் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற முடியாமல் இருப்பதாக” அடிக்கடி கூறுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.