நமக்கு இராஜதந்திரம் போதாது!

ஐயோ எங்களை காப்பாற்றுங்கள், சிங்களவன் எங்களை கொல்கிறான் என குடாநாட்டில் இருந்து ராஜிவை நோக்கி கூக்குரல் எழுப்பினோம். ஊரடங்கு சட்டம் போட்டு எங்களை பட்டினி போட்டு ஆமியை விட்டு எங்களை சாகடிக்கின்றான். உடனேயே தலையிட்டு அதனை நிறுத்துங்கள் என இரவு பகலாக யாழ் குடாநாடு ஓலமிட்டது. கிட்டத்தட்ட முள்ளிவாய்க்கால் அபயக்குரல்தான் அன்று ஒழித்ததும். எம்ஜிஆரின் தொப்புழ்கொடி தமிழகமும் ராஜிவை யாழ்ப்பாணத்துக்கு உதவுமாறு அந்த மனிதரின் பிறைவேட் டைமில் கூட நெருக்கடி கொடுத்தது.


ராஜிவும் விமானத்தை அனுப்பி உணவு பொதிகளை குடாநாட்டில் போட்டார். உடனடியாகவே ஐலன் பிறைட் கப்பலை உணவு, அத்தியாவசிய பொருட்களுடன் காங்கேசந்துறைக்கு அனுப்பினார். ராஜிவ் இல்லை மோடிகூட அன்று இருந்த்திருந்தால் இதைதான் செய்திருப்பார்.
இந்திய போர்விமானங்களை கண்ட இலங்கை படைகள் ஒப்பரேசன் லிபரேசன் நடவடிக்கைகை விட்டு ஓடிச்சென்று முகாம்களுக்குள் பெட்சீட்டுக்குள் பதுங்கிகொண்டனர்.
குடாநாட்டில் காத்தல் கடவுள் ரேஞ்சிக்கு ராஜிவை தூக்கி வைத்து கொண்டாடினோம். விட்டால் மீண்டும் சிங்கள ஆமி ஊருக்குள் வந்துவிடும் இன்னும் ஏதாவது செய்யுங்கள். உங்களால் முடியும் என்று தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ நடுவர்கள் போன்று ராஜிவை உசுப்பேத்தினோம்.
ஜெயவர்த்தனவை வெருட்டி சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சகிகலா பாணியில் கூவாத்தூர் ட்ரீட்மெண்ட் கொடுத்தது இந்திய படைகளை யாழ்குடாநாட்டில் கொண்டுவந்து இறக்கினார்கள் டீக்சிட்டும் ரொமேஷ் பண்டாரியும்
வந்து இறங்கிய சீக்கியனுக்கும், கூர்காவுக்கும் மாலை போட்டு ஆராத்தி எடுத்து மாப்பிள்ளை வரவேற்பு கொடுத்த நாம் என்ன செய்திருக்க வேண்டும்? ஆமை தலையை வெளியே நீட்டி பார்ப்பது போன்று போர்வைக்குள் இருந்து வெளியே எட்டி பார்த்த சிங்கள ஆமிக்கும் சிங்குகளுக்கும் சண்டை மூட்டிவிட்டுக்க வேண்டாமா? கூர்க்காக்களை கொண்டே அவன்களை அடித்து குடாநாட்டில் மட்டுமில்லாது வடகிழக்கை விட்டே துரத்தி விட்டிருக்க வேண்டாமா?
ஆனால் நாம் என்ன செய்தோம்? சிங்களவனுடன் புதிதாக அண்ணன் தம்பி உறவை உருவாக்கிகொண்டு ”டேய் சிங் நாயே வெளியே போடா பரதேசி!” என்றோம். ” we are brothers எங்களுக்குள் ஆயிரம் பிரச்சினை இருக்கும் அதை கேட்க நீ யார்?” என கூர்காவின் குடிநீரில் விசத்தை கலந்துவிட்டு ”நீங்கள் வாருகள் Bro” என்று பிரேமதாசாவின் தோளில் கைபோட்டுக்கொண்டு அலரிமாளிகையில் ஐஸ்கிறீம் சாப்பிட்டோம்.
நாம் செய்திருக்க வேண்டியதை சிங்களவன் செய்தான். துணிச்சலாக பெட்சீட்டை விட்டு வெளியே வந்து புகுந்து விளையாடினான். என்று Bro உறவில் இணைந்தோமோ அன்றே நாம் சிங்களவனுக்கு எடுபிடிகளாகி முள்ளிவாய்ய்க்கால் வரை அவனது திட்டத்துக்கு பலியாகினோம்.
இதனால்தான் முள்ளிவாய்காலில் நாம் குலறியபோது எவனுமே கண்டுகொள்ளவில்லை. உதவபோய் ராஜிவை போன்று வில்லங்கத்தை விலைக்கு வாங்க வேண்டிவருமோ என பயத்தில் வாய் மூடி பேசிக்கொண்டிருந்தனர் நாம் உதவி கேட்டோர்.. அவர்கள் கண்முன்னே ராஜிவ் நிழலாடியிருக்க வேண்டும்.
அன்று மட்டும் இல்லை இன்றுவரை வன்னியும் கிழக்கும் செம்மறி ஆடுகள் போன்று குடாநாட்டு கோமாளிகளின் கூத்துகளுக்கு தலையாட்டிக்கொண்டு அவர்கள் பின்னே ஓடிக்கொண்டே இருக்கின்றது.
நமக்கு இராஜதந்திரம் போதாது!.

(Rajh Selvapathi)