நவம்பர் -02 உள்ளிட்ட போராட்டங்கள் எதற்காக?

(என்.கே அஷோக்பரன்)

(இந்தப் பத்தி எழுத்தாளரின் கருத்துகளில் உடன்பாடுகள் இல்லையாகினும் இந்தப் பார்வை வாசகர் மத்தியில் விவாதத்திற்காக முன்வைக்கின்றோம் – ஆர்)

வரலாறு காணாத மக்கள் எழுச்சியை இலங்கை சந்தித்து, அதன் வாயிலாக, 2019 நவம்பரில் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்‌ஷ, வெறும் இரண்டரை ஆண்டு பதவிக்காலத்துக்குள் பதவி விலகியமை, பெரும் வரலாற்று நிகழ்வு. இதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.