நாம் தமிழர் கட்சி ஆவணம் : ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளப்போகும் ஆகப்பெரிய சவால்

(Arunmozhi Varman)

கட்டுரையை வாசிக்கும் முன்னான சிறுகுறிப்பு :
2012ம் ஆண்டு மேமாதம் அளவில் நாம் தமிழர் கட்சியினர் தமது கட்சியின் அறிக்கையை வெளியிட்டனர். இவ் ஆவணத்தில் இருக்கின்ற கருத்திய ரீதியிலான முரண்கள் தொடர்பான விமர்சனங்கள் இணையத்தளங்களில் குறிப்பாக சமூக வலைத் தளங்களில் நடைபெறுகின்றன. அந்நேரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் / அமைப்பாளர் சீமான் மற்றும் அவர் அரசியல் குறித்த பல்வேறு விமர்சனங்கள் எனக்கு இருந்தாலும், அவருக்கான ஆதரவான போக்கென்பது என்னுடன் இருந்தே வந்தது. அந்த அடிப்படையில் நாம் தமிழர் கட்சியின் மேற்குறிப்பிட்ட அந்த ஆவணத்தைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டேன். அனுப்பி வைப்பதாக கூறினார்களே அன்றி ஒருபோதும் அனுப்பி வைக்கவில்லை. அதன்பின்னர் அதனை வேறு சில நண்பர்கள் ஊடாக பெற்றுக்கொண்டு மிக மிக அபத்தமான, ஆபத்தான அந்த ஆவணத்தைப் படிக்க நேர்ந்தது. அதன் பயனாக எழுதிய கட்டுரை இது.