பரபரப்பை குறைத்துக் கொண்டு தூங்கும் நகரங்கள்….

(Saakaran)
1970 களின் பிற்கூறு வரை பரபரப்பாகவும் பாதுகாப்பாகவும் இயங்கி வந்தன எமது பொது மக்களுக்கான தூங்கா நகரங்கள். அது 1980 களின் முற்கூற்றில் ஆரம்பித்து 2009 மே மாதம் வரை போராளிகளினதும் இராணுவத்தின் தூங்கா நகரங்களாக மட்டும் தன்னை சுருக்கிக் கொண்டன. யுத்தம் காவு கொண்ட பொது மக்களுக்கான இந்தத் தூங்கா நகரங்கள் 2009 இற்கு பிறகு ஏற்பட்ட இராணுவ முகாங்களுக்கு இடையிலான ‘ஜனநாயகம்’ விழிப்படையச் செய்தது.
புலிகளின் ஏகபோகங்களுக்கு பயந்து அஞ்ஞாதவாசம் செய்தவர்கள் பலரும் அது பொது மக்கள் போராளிகள் சகோதர மொழி பேசம் சிங்கள் மக்கள் சக மொழிபேசும் முஸ்லீம்கள் மலையக மக்கள் என்று பலரும் வடக்கு கிழகிற்கு படையெடுத்தனர்.

பலர் புதினம் பார்க்கவும் சிலர் எல்லைகளை போட்டு ஆட்சி பிடிக்கவும் இன்னும் சிலர் இருந்ததை தூசி தட்டி புதுப்பித்து ஆட்சிப்படுத்தவும் புறப்பட்டுவந்தனர் வடக்கு கிழக்கிற்கு. இதற்கு இராணுவத்தினால் கையடக்கப்பட்ட பிரதேசத்திற்கும் எமது நிலம் தூசியுடன் இருக்கின்றது என்ற கோஷம் உண்மையில் நிலங்களை இழந்து நின்ற, வீடுகளை இழந்து நின்ற மக்களுக்கான உரிமைகளை மீள் எடுக்க போராட்டமாக மாற்றியது. இதில் அரசியல் கூதல் காய்ந்தவர்கள் பலர் அமைச்சர் வரை பதவி பெற்றனர்….வசதிகளை பெற்றனர் வாகனங்களைப் பெற்றனர். இன்னும் சிலர் விடுமுறைக்கு தங்குவதற்காக மட்டும் கோடிகளை கொட்டி ‘கொட்டகை’ போட்டுக் கொண்டனர். ஆனால் உண்மையில் நிலமற்றவர்கள் வீடற்றவர்கள் போக்கிடம் அற்றவர்கள் கேப்பாபுலவிற்கு வருடம் கடந்து போராட காணாமல் ஆக்கபட்டவர்கள் என்று 2009 இற்கு பிறகு ஏற்பட்ட காணமல் போனவர்கள் என்பதற்குள் தம்மை இணைத்து போராடியும் வருகின்றனர்.

 
கண்டாடிக் கட்டங்கள் புதுப்புது மோட்டார் சைகிள்கள் தொழில் முயற்சிகள் என்று கடனுதவி என்று புதிதாக சிறு நகரத்தில் வீதிக்கு வீதி உருவான கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் கடனை தாராளமாக வழங்கி வழங்கிய நாளில் இருந்து ‘மீற்றர்’ வட்டியையும் முதலையும் அறவிட ஆரம்பித்து விட்டன. இதற்கு ‘கவர்ச்சிகரமான’ சன்மானம் வழங்கும் உத்தியோகங்களும் சிலருக்கு வழங்கப்பட்டன. மாதத்தில் இத்தனை கோடி கடன் வழங்குங்கள் என்று ‘ராக்கெற்’ வைத்து ஆரம்பமான இந்த பரபரப்பு சில மதாங்களில் ‘ராக்கெற்’ வைத்து வட்டியை அறவிடுதலை அல்லது கடனாக வழங்கி வாங்கியதை தூக்கி வருதல் என்ற வரை வளர்ந்து போனது.
 
இதனால் ஆரம்பத்தில் உருவான ‘சிறுகடன்’ தொழில் முயற்சிகள் வாகனம் தொழில் முயற்சி இதற்கான கட்டடம் என்று பாய்சலில் புறப்பட்டு எமது கிராமங்களை நெருச்சல் நிறைந்த சிறு நகரங்;களாகவும் தூசியும் சத்தங்களையும் உடைய தெருக்களாகவும் இரவு பகல் பாராது ‘இயங்கும்’ பரபரப்பு நகரங்களாக மாற்றியது என்னமோ உண்மைதான். இது ஒரு வகை நெருச்சலான எரிச்சலகளை ஏற்படுத்தியே இருந்தது. ஆனால் இந்த நெரிசல்களும் தூங்கா நகரங்களும் சிறுகடனில் உருவான கடனையும் வட்டியையும் திருப்பி செலுத்த முடியாமல் தம்மை ‘மூடி’க் கொண்டு ஓட வேண்டி சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த நிலமை தற்போது கடந்த மூன்று வருடங்களாக மீண்டும் எமது நகரங்கள் தூங்கும் நிலைக்கு படிப்படியாக தள்ளிக்கொண்டிக்கின்றன.
 
இதனை அம்பாறையில் இருந்து யாழ்வரை அவதானிக்க என்னால் முடிகின்றது. இறுதியில் பலர் மீளமுடியாத கடனில் மூழ்கி செய்வது அறியாமல் திகைக்க வேலை வேண்டும் நிவாரணம் வேண்டும் என்று புறப்பட்டு போராடவும் தொடங்கிவிட்டனர். போராட்ட முடிவில் பிரசன்னமாகி வாக்கு சேகரிக்க முயன்றவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர் இன்னும் சில ‘அதிகார’ விசுவாசிகள் அதிகாரம் இல்லை என்று கூவிக்கொண்டு அதிகாரத்தில் தொங்கிய வண்ணம் தமிழ் தேசியத்தின் காவலனாக தம்மைக் காட்டி தப்பித்துக் கொண்டும் இருக்கின்றனர்.
 
போரின் சிதலங்களில் இருந்து மீண்டெழுந்து பலமிக்க சமூகமாக ஒரு தேசிய இனத்திற்குரிய உண்மையான அடையாளத்திற்குரிய வளர்சியை நோக்கி பயணத்திற்கான எந்த கட்டுமானமும் திட்டமிடலும் கொள்கை வகுப்புகளும் நடைபெறவில்லை. ஏன் என்ற கேள்விகளுக்கு இலகு பதிலாக அதிகாரம் இல்லை என்று அதிகாரத்தில் தொடர்ந்தும் இருந்து கொண்டே இருக்கின்றனர். இந்தப் பதிலை ஒரு தொகுதி மக்கள் நம்பிக் கொண்டும் இருக்கின்றனர்
1970 பிற்கூற்றில் வளர்ச்சிப் பாதையில் தேசிய அடையாளத்தை நிலை நிறுத்தி முன்னோக்கி நகர்ந்து கொண்டிருந்த தூங்கா கிராமங்கள்,
 
நகரங்கள் யுத்தத்தின் பொது போக்கால் பொது மக்களுக்கு தூங்கும் நகரமாக்கப்பட்டு மீண்டும் 2009 பொது மக்களுக்கான இராணுவக் கண்காணிப்பு தூங்கா நகரக்கமாகப்பட்டு இன்று மீண்டும் அதே இராணுவக் கண்காணிப்பிற்குள் தூங்கும் நகரங்களாக மாறி வருகின்றனர் கிராமத்திற்குள் வீடுகளாகவும் கிராமத்தின் சந்திகளில் வியாபார முயற்சிக்காக கட்டங்களாகவும் ;கீ’ மணி என்றும் பெருந்தொகை பணமீட்ட புறப்பட்ட நகரங்கட்டங்களும் வெறிச்சோடி எஞ்சி நிற்கின்றன.
தரிசு நிலங்களும் கடல் வளங்களும் சரியாக சேற்றிற்குள்ளும் நீருக்குள்ளும் கால்கள் அதிகம் வைக்கப்படாதததினால் பொருளாதார எழுச்சியை நோக்கிய பாய்சலில் புறப்படாமல் கற்பதிலும் தெற்குடன் ஒப்பிடுகையில் அதிக முன்னேற்றம் அடையாமல் ‘வெளிநாடு’ சென்றால் எல்லாம் தீரும் என்ற குடிசனப் பரம்பல் குறைகின்றது என்று கொக்கரிதாலும் உசுப்பேத்தலுடன் வெளிநாட்டிற்கு ஓடுங்கள் என்ற இளைஞர்களுக்கு உள் நாட்டி நம்பிக்கை தரும் முயற்சிகள் காட்டாத அதிகாரமும் இங்கு ஆட்சியை நடத்துகின்றது.
 
இந்நிலையில் நிரந்தரமாக தங்க கிராமத்தில் முளைக்கும் கோடிகளில் கட்டிய டாலர் வீடுகள் சில தினங்கள் மட்டும் மனிதர்கள் தங்கும் பல தினங்கள் குருவிகளும் சிலந்திகளும் பல்லிகளும் தங்கும் வீடுகளாக மாறி வருகின்றனர் உள்ளுர் உறவுகள் நட்புகள் சகாகள் இந்தியாவில் இருந்து நாடு திரும்பி வீடற்றவர்களாக நாதியற்று வீதிகளில் உறங்க தயாராகும் தூங்கும் நகரங்களாக மாறி வருகின்றன.