பற்குணம் ஏ.ஜி.எ (பகுதி47 )

அரச அதிபர் திஸ்ஸ தேவேந்திரா சமூக,பொருளாதார,அரசியல், பலம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்.இவர் 1977 இனக் கலவரம் தொடர்பான சன்சோனி கமிஷன் விசாரணைக் குழுவின் செயலாளராகவும் பணி புரிந்தவர். இவர் ஒரு நாள் எதேச்சையாக ரயிலில் மூன்றாம் வகுப்பு பெட்டியில் திருகோணமலை வந்தார்.அந்த வகுப்பில் இரண்டு பொலிஸ்காரர்கள் பயணிகளுடன் தகராறு பண்ணிக் கொண்டிருந்தனர்.அதைக் கண்ட கோபமடைந்த திஸ்ஸ தேவேந்திரா கண்டித்தார்.அவரை யாரென்று அறியாத அந்த பொலிஸ்காரர்கள் இவரை அடித்துவிட்டனர்.இந்த சம்பவம் கபரணைக்கு முன்பாக நடந்தது.

இதையடுத்து திஸ்ஸ தேவேந்திரா கபரணையில் இறங்கி பொலிஸ் நிலையம் சென்றார்.இவருக்கு முன்பாக அங்கு அந்த பொலிஸ்காரர்கள் அங்கே நின்றனர்.அவரகள் அந்த நிலையத்தை சேர்ந்த பொலிஸ் என்பது திஸ்ஸ தேவேந்திரா அவர்களுக்கு தெரியாது.அவரகளுக்கும் இவர் யார் என்று தெரியாது.எனவே மீண்டும் அவரை வாசலில் மிரட்டினார்கள்.

அவரோ கவனிக்காமல் உள்ளே போய் பொலிஸ் இன்பக்டரை பார்க்க வேண்டும் என்றார்.அப்போதும் இவர்கள் தகராறு பண்ணினார்கள்.சிறிது நேரத்தில் பொலிஸ் இன்பெக்டர் வர இவர் விசயத்தை சொன்னார்.இதனிடையே அந்த பொலிஸ் காரர்கள் இன்பெக்டரிடம் கதைக்க அவரோ சமாளித்து அனுப்ப முயன்றார்.திஸ்ஸ தேவந்திரா விடவில்லை. முறைப்பாட்டைக் கொடுத்தார்.இறுதியில் முகவரியைக் கேட்க அரசாங்க அதிபர்,திருகோணமலை என்றார்.அடித்த பொலிஸ்காரர்கள் அவர் கால்களில் வீழ்ந்து மன்னிப்புக்கேட்டர்கள்.இன்பெக்டர் எழுந்து நின்று சல்யூட் அளித்தார்.

அவரோ அடித்த இருவரையும் உடனடியாக வேலையை விடு நீக்குமாறு பணித்தார்.எந்தக் காரணம் கொண்டும் மன்னிக்க முடியாது.இது சாதாரண மனிதனுக்கு நடந்தால் அவன் என்ன செய்வான் என்று கூறி அவர்களை வேலையை விட்டு நீக்கப் பண்ணினார்.அந்த பொலிஸ் இனபெக்டரையும் எச்சரித்தார்.

இதுதான் பொலிஸ் புத்தி.இப்படி தமிழனுக்கு அல்லது இஸ்லாமியனுக்கோ நடந்தால் இனவாதமாக திரிபு படுத்திவிடுகிறோம்.ஒரு அரசாங்க அதிபருடன் எப்படி நடந்துள்ளர்கள்.எல்லா சம்பவங்களுக்கும் இன,மத,மொழி வேறுபாடுகள் காரணம் அல்ல.அதற்காகவே இந்த உண்மைச் சம்பவத்தை பதிவிடுகிறேன்.

(விஜய பாஸ்கரன்)
(தொடரும்…)