பற்குணம் ஏ.ஜி.ஏ (பகுதி 42 )

தம்பலகாமம் ஏ.ஜி.ஏ ஆக பொறுப்பேற்ற பின் தம்பலகாமம் பற்றி அவர் தன் பலகலைக்கழக நண்பர் சின்னராசா என்பவர் மூலம் அங்குள்ள நிலைமைகளை கேட்டு அறிந்தார்.அவர் அப்போது தம்பலகாமம் ப.நோ.கூ. சங்க முகாமையாளராக பணியாற்றினார்.அரசியல் மற்றும் நிர்வாக சீர்கேடுகள் இருந்தன. இதன் காரணமாக அதன் தலைமைப் பொறுப்பை பற்குணம் ஏற்றார்.இதுவும் அமைச்சர் மஜீத் அவர்களுக்குப் பிடிக்கவில்லை.

மஜீத் முஸ்லிம்களின் ஆதரவையும் தமிழர்களின் ஆதரவையும் கொண்டவர். தங்கதுரை தமிழர்கள் மட்டுமே ஆதரித்தனர் .பற்குணம் பொறுப்பேற்றதை தங்கதுரை ஆதரவாளர்கள் வரவேற்றனர்.ஏனெனில் அவர்களால் அரச எம்.பி ஆன மஜீத்துடன் போட்டிபோட முடியவில்லை.பற்குணம் பொறுப்பேற்ற பின் ப.நோ.கூ சங்க நிர்வாகம் சீரடைந்தது.மேலும் ப.நோ.கூ சங்க நிதியில் ஒரு கோழிப் பண்ணையையும் நிறுவினார் .இதற்கு சகல ஆலோசனைகளையும் அன்றைய மாவட்ட விவசாய அலுவலர் ந.சண்முகம் கொடுத்தார்.இதன் மூலம் அதிகளவு பெண்கள் வேலை வாய்ப்பு பெற்றனர்.இங்கு உற்பத்தியாகும் முட்டைகளை பேராதனைப் பல்கலைக் கழகம் கொள்வனவு செய்தது. அதை ஏற்பாடு செய்ததும் பற்குணம் தான்.இதுமிகவும் இலாபகரமாக இயங்கியது.

மறந்த தகவல் :- பற்குணம் குச்சவெளி டி.ஆர் .ஓ ஆக இருந்த காலத்தில் குச்சவெளி திரியாய் பாதையில் உள்ள கள்ளம்பத்தை சந்தியில் மக்களுக்கு காணி வழங்கி வெங்காய பயிர் செய்கையை அறிமுகப்படுத்தினார்.இதற்கு நன்றி தெரிவிக்கும் முகமாக அவருக்கு திரியாய் மக்கள் வழங்கிய திருமண வரவேற்பு விழாவில் பற்குணத்துக்கு திருமணப் பரிசாக அந்த இடத்தை பற்குண புரம் என்ற பெயரை வைப்பதாக அறிவித்தனர்.இது பெரும் வரவேற்புடன் ஆதரித்தனர்.

ஆனால் அந்த விழாவில் நன்றியுரை வழங்கிய பற்குணம் தனது பெயரில்அந்த இடத்தை அழைப்பதை நிராகரித்தார்.தன்னுடைய கடமைக்கு பிரதியுபகாரம் செய்யப்படுவதை தான் விரும்பவில்லை.அது தன் பணி எனக்கூறி கண்டிப்புடன். நிராகரித்தார் .இதன் பின் பலர் வீட்டுக்கு வந்து கேட்டபோதும் அதை மறுத்தார்.

தன்னை விளம்பரப்படுத்துவதை அவர் விரும்பியதில்லை.உண்மையில் அதில் ஒரு வெட்கம் அவருக்கு இருந்தது.

(விஜய பாஸ்கரன்)
(தொடரும்….)