கனடாவில் தோழர் ஸ்ராலின் அண்ணாவிற்கு அஞ்சலி நிகழ்வு

ஆரம்ப ஈபிஆர்எல்எவ் இற்கு தாங்கு சக்தியாக விளங்கிய தோழர் ஸ்ராலின் அண்ணாவிற்கு அஞ்சலி நிகழ்வு இன்று(June 05, 2016) கனடாவில் நடைபெற்றது. தோழர் ஜேம்ஸ் இன் வீட்டில் அமைந்துள்ள மண்டபத்தில் கூடிய பத்மநாபா மக்கள் முன்னணி(PPF)யினர் தமது கட்சியான தழிழர் சமூக ஜனநாயக் கட்சி – கனடா(SDPT- Canada) கிளை சார்பில் இந்நிகழ்வை நடாத்தினர். இதில் SDPT இன் கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டு தமக்கும் ஸ்ராலின் அண்ணாவிற்கும் இடையேயான உறவு பற்றி பகிர்ந்து கொண்டனர். ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் அர்பணிப்பு செய்து செயலாற்றியவர் தோழர் ஸ்ராலின் அண்ணா என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.

தமிழர் சமூக ஜனநாயக் கட்சி(SDPT)யின் தோழர் ஜேம்ஸ் இன் தலமையில் நடைபெற்ற இவ் அஞ்சலி நிகழ்வு சுமார் 1 மணி நேரம் நடைபெற்றது. கூடவே தோழர் நாபாவிற்கும், தோழர் ஸ்ராலின் அண்ணாவிற்கும் இடையே நிலவிய நெருக்கமான தோழமை, நட்பு என்பன பற்றியும் தோழர்கள் கருத்து தெரிவித்தனர். தோழர் ஸ்ராலின் அண்ணாவின் குடும்பம் முழுவதும் ஆரம்பகால ஈபிஆர்எல்எவ் இற்கு எந்த பிரதியுபகாரமும் எதிர்பார்க்காமல் அர்பணிப்புடன் ஆதரவுடன் வழங்கினர். இதனால் குடந்தை மக்கள் இன்றுவரை முன்னணியின் போராளிகளை தமது ஊரவர் போல் பேணிப் பாதுகாத்து ஆதரவு வழங்கிவருகின்றனர் என்பது ஈழப் போராட்டதின் வரலாறு ஆகும்.

இணைந்த வடக்கு- கிழக்கு மாகாணசபை அமர்விற் தோழர் ஸ்ராலின் அண்ணா விசேட பார்வையாளராகவும் கலந்து கலந்து கொள்ள முடியாத சூழலிலும் உருவான மாகாண சபைக்கு கௌரவமும், மரியாதையும், அங்கீகாரமும் வழங்கியிருந்தார் என்று தோழர் ஜேம்ஸ் தனது கருத்துரையில் தெரிவித்தார். விடுதலை அமைப்பின் சுய தயாரிப்பான எஸ்.எஸ் அனுபவங்களை தோழர் இரவி பகிர்ந்து கொண்டார். மேலும் இத்தயாரிப்பின் வெற்றிக்கு பின்னால் தோழர் சின்னவனுக்கு சம அளவில் உறுதுணையாகச் செயற்பட்டவர் தோழர் ஸ்ராலின் அண்ணா என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டது.
(நமது விசேட நிருபர் – கனடா)