பற்குணம் A.F.C (பகுதி 90)

இந்திய இராணுவ வருகையின் பின்பு மக்களின் வாழ்வு இயல்பு நிலைக்கு திரும்பியது.பல கிழக்குமாகாண மக்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பினார்கள்.இவர்களில் சிலர் திரும்பி போவதற்கு பணமின்றி பற்குணத்திடம் உதவி கோரினார்கள்.தன்னால் முடிந்தவரை உதவினார்.

இதே நாட்களில் பற்குணத்துக்கு பிடித்த நிர்வாக சேவைஅதிகாரி ஏ.ஜி.ஏ முருகவேள் காலமானார்.அன்றைய நாட்களில் தமிழர்களின் சீனியரும் முதல் தர நிர்வாக சேவை அதிகாரியும் ஆவார்.இவரின் விட்டுக்கொடுப்பற்ற தன்மையும் நேர்மையும் இவரால் பதவி உயர்வுகளை அடையமுடியவில்லை.அதைப் பற்றி முருகவேள் கவலைப்பட்டதில்லை.ஆனால் பற்குணம் முருகவேள் பற்றி கவலைப்பட்டார்.பல வகைகளில் உதவியும் ஆலோசனையும் பற்குணத்துக்கு வழங்கியவர
புலிகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி மட்டகளப்பு அரச அதிபர் அந்தோனிமுத்துவும் சக அதிகாரிகள் சிலரும்கொல்லப்பட்டனர்.பற்குணம் தனது நிர்வாக சேவைப்பயிற்சியை அந்தோனிமுத்து அவர்களின் கீழேயே பெற்றார்.

பற்குணம் தனது பயிற்சி முடிந்தபின் வடபகுதிக்கே வரவிரும்பினார்.அப்போது அந்தோனிமுத்து யாழ்ப்பாணத்தில் யாருக்கு சேவை செய்யப்போகிறாய்.குச்சவெளி போன்ற பின்தங்கிய இடங்களுக்கே உன்னைப் போன்றவர்கள் அவசியம் என ஆலோச னை வழங்கியவர் அந்தோனிமுத்து.அவரின் அகால மரணமும் கவலையைக்கொடுத்தது.

அமைதியான வாழ்க்கைச் சூழல் குலையதொடங்கியது.புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் கடலில் கைது செய்யப்பட்டனர்.சில நாட்களில் அவர்களின் தற்கொலை.திலீபன் உண்ணாவிரதம்.அவனின் மரணம் என இயல்பு நிலைகள் குலையத் தொடங்கின.

புலிகள் தமது ஆதரவாளர்களை ஒன்றுதிரட்டி கோட்டை வாசலில் ஆர்ப்பாட்டம் நடத்த அதனுள் இருந்து புலிகள் இந்திய இராணுவத்தை நோக்கி சுட மீண்டும் ஒரு யுத்தம் தொடங்கியது.இது இவ்வாறு நடக்கப்போகுறது என ஈரோஸ் பரராச்சிங்கம் சில நாட்களின் முன்பாக எங்கள் வீட்டில் வந்து கதைத்தார்.

யத்தம் அக்டோபர் 10 தொடங்கியது என நினைக்கிறேன்.மறுநாள் காலை ஒருஇந்திய இராணுவ்வாகனம் எமது பிரதான வீதி வழியாக காரைநகர் நோக்கிப் போனது.இவர்களை புலிகள் பொன்னாலைப் பாலத்தில் மறுத்தனர்.அவர் இயல்பாக இறங்க அவர்களை கைது செய்து கத்திகளால் வெட்டியும் இரும்புக் கம்பிகளால் அடித்தும் வீதி வழியாக நடத்திச்சென்றனர்.இதனை பலர் எம்மிடம் சொன்னார்கள்.இதை நேரில் கண்டவர் மன்னார் மாவட்ட சபையின் உப தலைவராகிருந்த கைலாசபிள்ளை என்பவர் எம்மிடம் சொன்னார்.

அன்றைய தினம் யத்தம் தொடங்கிய மறுநாள் புலிகளின் நிதிப்பொறுப்பாளர் செல்வரத்தினம் ஒரு அச்சடிக்கப்பட்ட தாளுடன் வந்தார்.அதில் இந்திய இராணுவ தாக்குதலை கண்டித்து பதவியை இராஜினாமா செய்கிறோம் என எழுதப்பட்டிருந்தது.அதில் கையெழுத்திடிமாறு பற்குணத்தைக் கேட்டார்.அவர் எதுவும் பேசவில்லை.கையெழுத்திட்டார்.பற்குணத்தின் பெயர்மட்டுமல்ல சகலகுடாநாட்டு நிர்வாகசேவை அதிகாரிகள் பெயரும் இருந்தது.

மறுநாள் புலிகள் மறைமுக இடத்திலிருந்து வெளியிட்ட பத்திரிகை ஒன்றில் செய்திளாக வந்தன.

(தொடரும்….)
(விஜய பாஸ்கரன்)