பழங்குடி தமிழ் மக்கள் காப்பாற்றபடுவார்களா?

(மு.தமிழ்ச்செல்வன்)

எங்களுடைய கண்ணுக்கு முன்னே நாங்கள் பயிர் செய்த நிலம் பறிக்கப்பட்டுள்ளது. எங்களது குடியிருப்பு காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. நாங்கள் அநாதைகளாக வாழ்கின்றோம். என அதிருப்திகளை அடுக்கிக்கொண்டே சென்றார் நடராஜா கனகரட்னம் ஐயா.