பிரச்சினைகளை தீர்க்காமல் மக்களை பேய்க்காட்டும் எத்தனங்கள்

(மொஹமட் பாதுஷா)

நாட்டு மக்கள் கடந்த பல மாதங்களாக எதிர்கொண்டுள்ள எந்தவொரு பிரச்சினைக்கும் இந்த நிமிடம் வரை நம்பிக்கை தரும் தீர்வுகள் எட்டப்பட்டதாக இல்லை. மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு அரசியல் ரீதியான ஸ்திரத்தன்மை கொண்டு வரப்படவில்லை. குறைந்தபட்சம், மக்கள் அன்றாடம் முகம்கொடுக்கின்ற வாழ்வாதார பிரச்சினைகளுக்கு கூட தீர்வு காணப்படவில்லை.