பிரபாகரன் ஈழத்தமிழ் மக்களுக்கு இழைத்தது பாரிய துரோகம்!

தமது கருத்துக்களோடு உடன்படாதவர்களை..தம்மை விமர்சித்தவர்களை. தமக்கு போட்டி பங்காளிகளாக கருதப்பட்டவர்களை ஈவு இறக்கம் இல்லாமல் கொன்றொழித்து வந்தவர் பிரபாகரன். தாமே ஏகப்பிரதிநிதிகள். தாமே தமிழரின் பாதுகாவலர்கள், என்ற மமதையில் ஏனைய இயக்க தலைவர்களையும், போராளிகளையும் மாத்திரமல்ல சமூகத்தில் புத்தி ஜீவிகள், கல்விமான்கள் போன்றவர்களையும், தம்முடன் உடன்படாதவர்களையும் துரோகிகள் என்று கூறி கொலை செய்தவர் தான் பிரபாகரன்.