பொறுப்பை மறந்தால் முழு நாட்டையும் வைரஸ் தாக்கும்

(எம்.எஸ்.எம். ஐயூப்)
கொவிட்-19 எனப்படும், தற்போது உலகை உலுக்கும் நோயின் மரண வீதம், ஆபிரிக்காக் கண்டத்தின் சில நாடுகளில், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பரவிய, ‘எபோலா’ எனப்படும் நோயின் மரண வீதத்தைப் பார்க்கிலும், மிகவும் குறைவானதாகும். ‘எபோலா’ தொற்றியவர்களில் 50 சதவீதம் முதல் 90 சதவீதமானவர்கள் உயிரிழந்தார்கள். ஆனால், ‘கொவிட்-19’ தொற்றிவர்களில் மூன்று சதவீதமானவர்களே மரணமடைகின்றனர்.