மக்களின் சமூகப் போராளி தோழர் சுபத்திரன்

(சாகரன்)

தமிழ் பேசும் மக்கள் தரப்பில் தலமைத்துவ இடைவெளி… பற்றாக்குறை…. இருப்பதாக உணரப்படுவதாக ஊடகவியலாளர்கள் பலரும் தமது பதிவுகளின் அண்மைக் காலங்களில் எழுதி வருவதை அவதானிக்க முடியும். மக்களிடமும் இந்த உணர்வலை இருகத்தான் செய்கின்றது. அணி மாறல்களும், புதிய கட்சிகளும் உருவாக்கம் பெற்றாலும் இந்த இடைவெளி உணரப்படுகின்றது உண்மையாகவே உள்ளது.