மண் மீட்பு……?

(சாகரன்)

அண்மையில் இலங்கை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கோட்டாபாய ராஜபக்ஸ அரசு ஒரு கட்டுப்பாட்டுத் தளர்த்தல் அறிவித்தலை வெளியிட்டுள்ளது. அது இனிவரும் காலங்களில் கட்டுப்பாடற்ற முறையில் மணல் அள்ளலாம் என்பதே அது. கட்டுப்பாடுகள் இருந்த போதே தமது மணல் அள்ளலை ‘வெற்றிகரமாக’ செயற்படுத்தி வந்த ‘டிப்பர்’கள் தற்போது ஒரு நாளில் சில இடங்களில் 350 இற்கு மேற்பட்ட அள்ளல்களை மேற்கொள்கின்றனர்.