மனச்சாட்சித் தமிழர்களும் சோம்பேறித் தமிழர்களும்…..

அவர்களில் ஒரு பகுதியினருக்கு மனச்சாட்சி உறுத்துகிறது. போரைக் காரணம் காட்டி இங்கு குடும்பம் குடும்பமாக வந்து விட்டோம்.
தப்பிப் பிழைத்து விட்டோம்.வசதியாக வாழ்கிறோம்.

தாயக மண்ணில் போரின் பாதிப்பால் துன்பப்பட்ட மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்.?

செய்கின்றனர்.
நிறுவனமயப்பட்டும் செய்கின்றனர். தனி நபர்களாகவும் உதவிகளைச் செய்கின்றனர்.

அதன் விளைவு இங்கு பல இடங்களில் வேலை வில்வெட்டிக்குப் போகாமல் சோம்பேறியாக இருக்கும் மனிதர்களை உருவாக்கி விட்டது.

நாம் அரச ,அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலமாக வாழ்வாதார உதவிகளைச் செய்தால் 25 வீதம் தான் சிறந்த அறுவடையைப் பெற முடிகிறது.

ஒரு பிள்ளையைக் காட்டி 4 முறை சைக்கிள் எடுத்த கெட்டிக்காரர்களை 4 முறை தையல் இயந்திரம் எடுத்தவர்களையெல்லாம் கண்டுள்ளேன்.

கொடுத்த வாழ்வாதாரத்தை மேற்பார்வை செய்யப் போனால் ” செய்ய மாட்டேன். இந்த நிறுவனம் போனால் இன்னொரு நிறுவனம் வரும். தரும். ஆடி ஆவணி பிறந்தால் வெளிநாட்டுக்காரன் வருவான்.
காசு தருவான்.”

என வீறாப்புக் கதைக்கும் பலரைக் கண்டுள்ளேன்.

ஒரு வேலை செய்ய கூலி வேலைக்கு ஆள் பிடிக்க நாம் படும்பாடு பெரும்பாடு தான்.

மனச்சாட்சி பார்த்து அல்லது தாயகப் பற்றால் உதவி செய்யும் தமிழர்களால் நிறைய சோம்பேறித் தமிழர்கள் உருவாகி விட்டார்கள்.