மறைக்கப்பட்ட வரலாறுகள்

சுமார் 4000 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் நாக அரச வம்சத்தினர் சிறப்பாக ஆட்சி செய்து வந்தனர்….நாக வம்சத்தினர் காலத்தில் தான் ஹரப்பா, சிந்து சமவெளி ,நகரங்கள் உருவாக்கப்பட்டு..செழிப்பாக இருந்தது…அப்போது வந்த வெளிறிய ஆரியர்கள் …இங்கு நிரந்தரமாக குடியேற வேண்டும் என ஆசைப்பட்டு…
நாக அரசர்களிடம் பணியில் அமர்ந்து சூழ்ச்சி செய்து அரசர்களிடையே பிரிவினையை உருவாக்கி…வெள்ளையர்கள் போல் பிரித்தாளும் கொள்கையை கடைபிடித்து…சில ராஜ்யங்களை கைப்பற்றினர்..

பிறகு வேதங்களை சொல்லி, அரசர்களிடம் , நாங்கள் கடவுள் பாஷை தெரிந்தவர்கள் என சொல்லி பிராமணர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.. பிறகு நர பலி, பல்வேறு யாகம் ,சடங்குகளை திணித்து அரசர்களை, மக்களை அடிமை படுத்தி , அரசவைகளில் அலோசகர்களாக இருந்து மறைமுகமாக ஆட்சி செய்தனர்…பிறகு வரனாசிரமத்தை நிறுவி பிராமணன், சத்ரியன்,வைசியன், சூத்திரன் போன்ற பிரிவுகளை உருவாக்கினான்….

அப்போது சாக்கிய வம்சத்தை சார்ந்த சித்தார்த்தன்…தந்தை பெரியார் போல் சடங்கு,யாகம், உயிர் பலி அணைத்ததையும் எதிர்த்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்..

அதன் பிறகு தான் புத்த மதம் உருவாகி வளர தொடங்கியது… புத்த மடங்கள் நிறுவப்பப்பட்டன…. சாம்ராட் அசோகா கலிங்க போருக்கு பின் மனமாற்றம் அடைந்து புத்தம் தழுவினார்.. பிறகு வேதமதங்களில் உள்ள தவறான, முடநம்பிக்கை சடங்குகளை ஒழித்தர்…. அப்போது வாழ் விழந்த ஆரியர்களுக்கு மெளரிய மன்னர்கள் வரி சலுகை வழங்கி அவர்களுக்கு அக்ராஹாரங்கள் (வரி செலுத்த இயலாதவர்கள்) உருவாக்கி காத்து வந்தனர், மற்றும் அரச பதவிகளும் சலுகை அடிப்படையில் முக்கத்துவம் தரப்பட்டது…

இந்திய, சீனா, தென் கிழக்கு ஆசிய வரை புத்தம் பரவி இருந்தது…700 வருடம் இருந்த மெளரிய பேரரசு இந்தியாவின் பொற்காலம் எனப்பட்டது… மெளரிய வம்சம், பேரரசின் இறுதி மன்னன் பிராகிருதன், புஷ்ய மித்ர சுங்கன் என்ற ஆரிய இன படை தளபதியால், சூழ்ச்சியால் சாகடிக்கப்பட்டு… சுங்க வம்சத்தை நிறுவினான் ..

அப்போது மீண்டும் வேத மதம் எழ தொடங்கியது…இந்த கால கட்டத்தில் தான் இதிகாசங்கள், புராணங்கள், கடவுள் கதைகள் எழுதப்பட்டு.. புத்த விகர்களை போல் கோவில்கள் கட்டப்பட்டு வந்தன…சுங்க மித்திரன் ஆட்சியில் புத்த பிக்ஷுக்கள் தலைக்கு பரிசுகள் அறிவித்து ஒரு இன படு கொலையை நடத்தினான்…

அப்போதுதான் புத்த பிக்ஷுக்களின் தலை வீட்டின் முன்புறம் தொங்கவிடப்பட்டது.. அந்த வழக்கம் தான் இப்போ நம் வைக்கும் திருஷ்டி பூசணிக்காய் ஆக மாறி உள்ளது.. குப்த பேரரசு உருவான பிறகு மிகுந்த எழுச்சி பெற்றது வேத மதம்… அந்த காலகட்டத்தில் தான் நாக அரசர்கள் போர் மூலம் சாகடிக்கப்பட்டனர்.. ஆரியர்களை, கடவுள் அவதாரமாகவும், நாக அரசர்களை அசுரர்களாகவும் சித்ததரித்து கதைகள் எழுதப்பட்டன…

இந்திய முழுமையும் வேத மதம் பரப்ப பட்டது… மரத்தடியில் உள்ள புத்த சிலைகளை எல்லாம் அகற்றி விட்டு விநாயகரை வைத்தார்கள்.. அந்த கால கட்டத்தில் இந்து மதத்தை ஏற்காத பூர்விக குடிகளாகிய நாம் புத்த மதத்தை தொடர்ந்து பின்பற்றியதால்… நம்மை ஊரை விட்டு ஒதுக்கி சேரியில் வைத்தனர்…

நாம் புத்த மதத்தை தழுவி இருந்ததால் தான் அவர்கள் நம்மை கோவிலுக்குள், மற்றும் அவர்கள் தெருக்களுக்குள் , அனுமதிக்காமல்…

நம்ம சொத்துக்களை பிடுங்கி அரசுடமையாக்கி, நில பிரபுக்களிடம் ஒப்படைத்தனர்…

பிறகு ஏழ்மையின் காரணமாக வேறு வழியின்றி கொத்ததடிமைகளாக்கப்பட்டு…

இழி தொழில் செய்ய பணித்தனர்..
நாம் அனைவருமே ஒரே பூர்விக குலம். யாருக்கும் அஞ்சாமல் நாட்டை ஆண்ட பரம்பரை…

இந்த பதிவு அண்ணல் அம்பேத்கர் அவர்கள் எழுதிய புத்தகத்தில் இருந்து பதிவேற்றப்பட்டுள்ளது…

பாலி மொழி ,சமஸ்கிருதம், மற்றும் பல மொழிகளை கற்று..

10 வருடங்கள் ஆராய்ச்சி செய்து இந்த வரலாறுகளை எழுதி உள்ளார்..
அம்பேத்கர் போல் யாரும் இதுவரை இந்திய வரலாறுகளை ஆராய்ச்சி செய்ய்வில்லை…

இது பார்ப்பனர் களுக்கு எதிரான பதிவு இல்லை ….

உண்மை வரலாறு மட்டுமே…

இவை அனைத்தும் மக்களிடையே மறைக்கப்பட்டுள்ளது…

சுருக்கமகா எழுதி உள்ளேன்.