மேதினம் அறை கூவும் அறம்

இதன் குறிக்கோள் மானிட விடுதலை.
இதுவரை கால வரலாறுகள் யாவும் வர்க்க போராட்ட வரலாறுகளே என்று பிரகடனம் செய்த கார்ல் மாக்சின் பிறந்த தினம் மே 6.
இரத்தம் தோய்ந்த கொடிகளை உயர்த்தி தொழிலாளர் உரிமைகளை வென்றெடுப்பதற்காக நடத்திய போராட்டத்தின் நினைவுகளையும் மனித குலத்தின் இடையறாத போராட்டத்தையும் சுதந்திரத்தையும் கண்ணியத்தையும் வலியுறுத்துவது மேதினம்.

சுரண்டல் சமூக ஏற்ற தாழ்வு சமுக நீதி மறுப்பு ,பால்சமத்துவ நிராகரிப்பு சுற்றாடல் பற்றிய ஈவிரக்கமற்ற நிலை ,இந்த கரிசனைகளுடன் சமகாலத்தில் பரந்த அர்த்தம் கொண்டது மேதினம்.
போராடாமல் உரிமைகளை வென்றெடுக்க முடியாது என்று மனித குலத்திற்கு அழுத்தம் திருத்தமாக அறைகூவல் விடுப்பது மேதினம்.
மானிட வாழ்வை செம்மை படுத்துவது மனித கண்ணிய பதாகைகளை உயர்த்துவது என்ற இடையறாத மானிடக் குரலை முன்நிறுத்துவது மேதினம்.
சமகால உலகில் பேரழிவு யுத்தங்களையும் ஈவிரக்கமற்ற இடையறாத சூறையாடலையும் காற்றையும் நீரையும் கடலையும் ஆகாயத்தையும் மாசடைய செய்யும் செயல்களையும் நிராகரிப்பது மேதினம்.
தமது நிலங்களை நீர்நிலைகளை மீட்பதற்காக ஆக்கிரமிப்பிலிருந்து விடுதலை பெறுவதற்காக இன்று வரை எமது மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
பயங்கரவாத தடை சட்டம் இலங்கையில் இல்லாதொழிக்கப்படவேண்டி இருக்கிறது.
இந்த நாடு காட்டுமிராண்டி தனங்களின் எச்ச சொச்சங்களில் இருந்து விடு படுவதற்கு இது அடிப்படையானது.
சித்திரவதைகளையும் காணமல் ஆக்கலையும் கற்ற ஒரு கூட்டம் அரச மற்றும் சமூக மட்டத்தில் காணப்படுகிறது.
மானிடத்தின் நிகரற்ற தார்மீக அற வலுக்கள் சமூக அரச மட்டத்தில் நிமாணிக்கப்படவேண்டும்.
இன வகைப்பட்ட நோக்கில் தீண்டாமை சிந்தனைகளின் அடிப்படையில் கொலைகளையும் சித்திரவதைகளையும் சமூக சுத்தீகரிப்புக்களையும் அங்கீகரித்த பின் தங்கிய சமூக பிரிவினர் இலங்கையின் எல்லா இனக்குழுக்களிலும் காணப்படுகின்றனர்.
ஏன் உலகளாவிய அளவில் கூட.
மனங்களில் தீவிர சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன.
இலங்கை பல்லின் சமூகங்களின் நாடு என்ற உண்மை நிலை நாட்டப்பட வேண்டும்.
மத சார்பற்ற நாடு என பிரகடனம் செய்யப்பட வேண்டும்.
வெறுப்புணர்வு காவிகளுக்கு நாடி தடவும் நாடாக இலங்கை இருக்கும் வரை உருப்பட முடியாது.
அது துயரத்தின் கடலாகத்தான் இருக்க முடியும்.
கடந்து வந்த 30 ,40 வருடங்களில் யுத்தம் இனவாத விசச் சுழலால் குறிப்பிடத்தகுந்த எந்த முன்னேற்றத்தையும் எட்டவில்லை.
பேரழிவு யுத்தம் இந்த நிலை இனிமேலும் வேண்டாம் என்ற நிலைக்கான நிபந்தனைகள் இன்னும் உருவாக்க படவில்லை.
இன சமூகங்கள் அதிலும் மனித உரிமை ஜனநாயகம் தொடர்பாக நெடுந்தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது.
வறுமை -சமூக நிராகரிப்பு இந்த மக்களின் வாழ் நிலையில் எந்த குறிப்பிட தகுந்த மாற்றமும் ஏற்படவில்லை.
கல்வி முறையில் தீவிர சீர் திருத்தங்கள் தேவைப்படுகின்றன.
தன்னம்பிகையும் சொந்த காலில் நிற்பதற்குமான தீவிர சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன.
எமது நில நீர் கடல் வளங்களை பாதுகாப்பது மேம்படுத்துவது தொடர்பான கரிசனைகள்.
அரசியல் -அரச- நிர்வாக யந்திரம் மக்களிடம் இருந்து அன்னியப்பட்டு எல்லையற்ற அதிகாரக் குவிப்பை செய்வதிலேயே ஆவல் கொண்டுள்ளது.
மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் மக்களின் ஆணைகளை அலட்சியம் செய்வது பொறுப்புணர்வுடன் செயற்படுவதற்கு பதிலாக பரஸ்பரம் கழுத்தை திருகுவது பாராளுமன்றத்தை மாகாண சபையை கேலிக்குரிய இடமாக வெறுப்பை உமிழும் இடமாக மாற்றுவது
மக்களிடம் ஆணை பெறும் வரை மனித உரிமை ஜனாநாயகம் சமூக பொருளாதார சுற்றாடல் உரிமைகளை பேசுவது . அதிகாரத்திற்கு வந்த பின் வாக்குறுதிகளை முறிப்பது நிரந்தர அரியணை சிந்தனகளில் மூழ்கிவிடுவது
சட்டத்தில் இருக்கும் விடயங்களையே செயல்படுத்துவதில் பெரும் தயக்கம்.
லீசிங் கம்பனிகள் மக்கள்டம் சூறையாட அனுமதிக்கப்பட்டிருக்கின்றன.
சமூக பாதுகாப்பு கேலிக்குரியதாக்கப்பட்டுள்ளது.
மலையக தோட்ட தொழிலாளர்கள் ஆடை தொழிற்சாலை தொழிலாளர்கள் மத்திய கிழக்கில் பணிப்பெண்கள்
இந்த தொழிலாளர்களின் பாதுகாப்பு அச்சம் தரும் வகையில் குறைந்துள்ளது,
சுனாமியும் வெள்ளம் புயலும் மண்சரிவும் இராணுவ ஆக்கிரமிப்புக்களும் குப்பை மேடுகள் ஏற்படுத்தும் அனர்த்தமும் சமானிய பெருவாரியான மக்களின் வாழ்வையே அழிக்கின்றன.
நாட்டில் பெருவாரியான மக்களுக்கு கண்ணியமான சுய மரியாதையுடன் கூடிய வாழ்வு வேண்டும்.
வீடு தொழில் சுகாதாரம் கல்வி போன்ற விடயங்களில் பெரும் அலட்சியம் நிலவுகிறது.
ஆனால் கூச்ச நாச்சமின்றி வெட்கம் ரோசம் இன்றி ஆடம்பரமான வரப்பிரசாதங்களை தனிப்பட்ட முறையில் பெற்றுக்கொள்வதில் ஆசாட பூதிகளான அரசியல் தலைவர்கள் கை தேர்ந்தவர்கள்.
சிறப்பு சலுகைகளை பயன் படுத்தி குறுக்கு வழிகளில் தமக்கும் தமது உற்ற சுற்றத்திற்கும் பெருக்கி கொள்வதில் கை தேர்ந்தவர்கள்.
ஒரு 300 பேர் உற்றமும் சுற்றமுமாக பகிரங்கமாக கொள்ளையடிக்கப்பட்ட நாடிது.
இந்த லட்சணத்தில் தார்மீகம் அகிம்சை என பேச்சு வேறு.
அதிகாரத்திற்கு வந்ததும் வராததுமாக அவசர அவசரமாக சூறையாடல் நிகழ்த்துகிறார்கள். வ்டிவேலுவின் காணாமல் போன கிணறு தோற்று விடும்.
பெண்கள் சிறார்களுக்கு எதிரான வன்முறைகள் நாழும் பொழுதும்
அன்றாடம் தெரு விபத்துக்களில் சாவுகள்
ஒளிந்திருந்து லஞ்சம் வாங்கும் வீதி போக்குவரத்து கண்காணிப்பு பொலிஸ்.
வாள்வீச்சு கொள்ளையர்கள் கொலைஞர்களை கட்டுப்படுத்த முடியாத கையாலாகாத வடக்கின் அரசியல் நிர்வாக சட்டம் ஒழுங்கு யந்திரம்
இன வன்முறைகள் சிறுபான்மையினர் தாக்கப்படும் போது வேடிக்கை பார்க்கும் சட்டம் ஒழுங்கு.
கார்ப்பிரேட் உலகம் விரல் விட்டு எண்ணக் கூடிய பில்லியனர்களையும் வறுமையில் வாடும் உலகின் கோடான கோடி மக்களையும் மத்திய கிழக்கிலும் ஆசிய ஆபிரிக்கவிலும் யுத்தங்களில் மக்கள் கொல்லப்படுவதையும் நோய் பட்டினி மரணங்களையும் பராமரிக்கிறது.
மத அடிப்படைவாத குழுக்கள் ஈவிரக்கமற்ற பாலியல் சமூக வண்முறைகளில் ஈடு பட்டு வருகின்றன.
மரண வியாபாரம் களை கட்டி நிற்க அறம் போதிக்கப்படுகிறது.
சகோதரத்துவத்திற்கு பதிலாக வெறுப்புணர்வு விசக்காற்று திறந்து விடப்பட்டுள்ளது.
சமூக ஒற்றுமை மனிதகுல ஐக்கியம் அலட்சியம் செய்யப்படுகிறது.
உணவும் நீரும் காற்றும் வீடும் எல்லா மனிதருக்கும் கிட்ட வேண்டும்!
இந்த அநீதியான உலக் ஒழுங்கு வேரோடு சாய வேண்டும்!!
விடியல் ஒன்று ஜனனமாக வேண்டும்!!!

தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி