மே தினம் யாருக்கு? சடங்காதலும் சங்கடங்களும்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

ஆண்டுதோறும் மே தினம் வந்துபோகிறது. அந்நாள் ஒரு விடுமுறை நாள்; அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் என்ற படிமங்களே, இலங்கையர் மனதில் ஆழப்பதிந்துள்ளது. மே தினத்துக்கு என்று உன்னதமான வரலாறு உண்டு. உலகெங்கும் உழைக்கும் மக்களின் ஒரே தினம், மே தினம் மட்டுமே என்ற உண்மை, எம்மில் பலருக்கு உறைப்பதில்லை.