யாழ். பல்கலைக்கழக உருவாக்கமும் எதிர்ப்பும்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

ஸ்ரீ லங்கா முதல் சிங்கலே வரை – 11

ஈழத்தமிழரின் அறிவுக் களஞ்சியமாகப் போற்றப்படுவது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகம் குறித்த விமர்சனங்களுக்கு அப்பால், அந்தப் பல்கலைக்கழகத்தின் தேவையும் அது கடந்த நான்கு தசாப்தகால ஈழத்தமிழர் வாழ்வியலில் ஆற்றிய பங்கும், மறுக்கப்பட முடியாதன.