ரணில் காப்பாற்றப்பட்டாலும் கைவிடப்பட்டாலும் நமக்கு எந்த நன்மையும் இல்லை!

டி. எஸ். சேனாநாயக்கவின் தலைமையில் ஐதேக பின்னர் அவரது மகன் டட்லி சேனநாயக்கவின் தலைமையின் பின்னர் அந்த கட்சியை இதுவரை ஜயவர்தன குடும்ப சொத்தாகவே இருந்து வந்துள்ளது, இலங்கையில் ஒரு தலைவருக்கான அதி கூடிய அதிகாரத்தை நாடாளுமன்றம் மூலமும் மக்களின் வாக்களிப்பு மூலமும் பெற்றுக்கொண்ட முதல் மனிதர் ஜெ ஆர் ஜயவர்தன, ரணில் அவர்களின் மாமா, இடையில் பிரேமதாசாவின் இடைவிடாத முயற்சியின் பலனாக அவர் ஜனாதிபதியாக வந்தார், எனினும் ஐதேக ஜேஆர் குடும்பத்தை விட்டு வேற்று மனிதர்களிடம் கைமாறிவிடவில்லை அதன் தலைமையை ரணில் விக்கிரம சிங்க பொறுப்பேற்றார், இவரது தலைமைக்கு எதிராக பிரேமதாசாவின் புதல்வர் எத்தனை முறை முயற்சித்தும் அது கைக்கூடவில்லை, இப்போது பிரதமர் பதவியை துறக்க வேண்டும் என கோரி ரணில் அவர்களுக்கு எதிரான பிரேரணை நாடாளுமன்றுக்கு வந்துள்ளது.

இந்த பிரேரணை இந்த ஆட்சியை கலைப்பதற்கு அல்ல ஒரு தனிநபரின் பதவியை நீக்க வேண்டும் என்பதன் மட்டுமே, இந்த பிரேரணைக்கு சிறுபான்மை கட்சிகள் எதிர்த்து வாக்களிக்கும் என்பது தெரிந்த விடயமே” ஆனால் இந்த பிரேரணை நிறைவேறும் என்பது கேளிவிக்குறியானதே? காரணம் தனக்கு இசைந்து போகும் ஒருவரை ஜனாதிபதி கைவிடப்போவதில்லை என்றே தோன்றுகிறது? இந்த மூன்று வருட ஆட்சியில் இந்த புரிந்துணர்வு தொடர்ந்து வந்துள்ளது, இதில் ரணில் வெற்றிப்பெற்றால் அவரை இனி அசைக்க முடியாத ஒரு கட்டுக்குள் அவரை பலப்படுத்திக்கொள்வார் என்பது யதார்த்தம்.

ஆனால்” யார் இந்த பதவியில் இருந்தாலும் வந்தாலும் தமிழருக்கு எந்த நன்மையும் கிட்டப்போவதில்லை என்பது மட்டுமே உண்மை.

(வரதன் கிருஸ்ணா)