வறுமையை முற்றாகவே ஒழித்துக் கட்டியது சீனா

ஐ. நாவின் 2030 நிகழ்ச்சித் திட்ட இலக்கை 10 வருடம் முன்கூட்டியே அடைந்ததன் மூலம் பெரும் சாதனை. நாட்டின் வறுமைப் பட்டியலில் இருந்து எஞ்சியிருந்த சகல மாவட்டங்களையும் நீக்கி சீனா சாதனையைப் படைத்திருக்கிறது. வறுமையில் பாதிக்கப்பட்டிருந்த கடைசி ஒன்பது மாகாணங்களுமே தென்மேற்கு சீனாவின் குயிஷூ மாகாணத்தைச் சேர்ந்தவை. அவை முற்றுமுழுதான வறுமையை ஒழித்திருப்பதாக மாகாண அரசாங்கம் சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது. இதன் அர்த்தம் சீனாவில் பதிவு செய்யப்பட்ட மொத்தம் 832 வறுமைப்பட்ட மாவட்டங்களுமே வறுமையை ஒழித்து விட்டன என்பதாகும்.