வாழும் கியூபா தலைவர் பிடல் காஸ்ரோ

உலகின் இயற்கை விவசாயத்தில் முக்கிய இடம் வகிக்கும் நாடு கியூபா மட்டுமே, இரசாயன உணவுகளையும் தனது வாழ்நாளில் வாழ்ந்த காலத்தைவிட அதிக காலம் குளிர்சாதன பெட்டிக்குள் இருக்கும் உணவு பதார்த்தங்களை உண்ணும் இந்த நவீன உலகில் அதிக இயற்கை உற்பத்திகள் உள்ள ஒரு நாடு என்ற ஒரு பெருமையை கியூபா கொண்டுள்ளது. ஒரு காலத்தில் அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தின் ஆசீர்வாதத்துடன்  ஆட்சி செய்த புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டா வின் ஆட்சியில் (1959) அதிக ரசாயன உரங்கள் காரணமாக அழிந்து வந்த விவசாய நிலத்தை இயற்கையின் உர வகைகளை பயன்படுத்தி உலகின் இயற்கை உணவு உற்பத்தி செய்யும் நாடுகளில் முதல் நாடாக ஆக்கி விட்டு போயிருக்கிறார்.

இதைவிட நம்மூரில் சாதாரணமாக கிடைக்கும் முருங்கை மர நாற்றுகள் இந்தியாவில் இருந்து கொண்டு சென்று அதை கியூபா முழுவதும் பரவ செய்திருக்கிறார் மறைந்த பிடல் காஸ்ட்ரோ அவர்கள், காரணம் போதிய நோய் எதிர்ப்பும் ஆரோக்கியமும் கூடிய ஒரு உப உணவு அது, அதைவிட அதை தனது வீட்டு தோட்டத்தில் பயிர் செய்து இருக்கிறார்.

இந்த இயற்கை உணவின் காரணமாக அவர் இறக்கும் சில நாட்களுக்கு முன்னர் கூட 90 வயதில் தனது வீட்டு தோட்டத்தை சுற்றி பார்த்துவிட்டு வந்தாராம்.

எனவே மக்களையும் நாட்டையும் நேசிப்பவன் மட்டுமே மறைந்த பின்னரும் தலைவனாக இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருப்பான்.