வாழ்க்கை

(வேதநாயகம் தபேந்திரன்)
அவருக்கு வயது 86.ஓய்வு பெற்ற உபாத்தியாயர் ( ஆசிரியர் ). அதிகாலை
வேளையில் கையில் மண்வெட்டியுடன் தோட்டத்திற்குப் புறப்பட்டார்.

பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் மறித்தனர். இவ்வாறு மறிப்பது அவர்களது நாளாந்தக் கடமை.

” ஐயா, நல்ல வசதியாக இருக்கிறம். ஏன் தோட்டம் செய்து கஸ்ரப்பட வேண்டும்.
வீட்டில ஓய்வா இருங்கோ ”