விடுதலை புலிகளின் மிக கொடூரமான வரலாற்றுப்பக்கள்.

விடுதலை புலிகளின் மிக கொடூரமான வரலாற்றுப்பக்கங்களை இதே போன்றதொரு ஆகஸ்ட் 3ல் 26வருடங்களுக்கு முன்பு காத்தான்குடி மண்ணில் அவர்களின் துப்பாக்கிகள் எழுதியிருந்தன .மத வழிபாட்டில் ஈ்டு பட்டிருந்த சக மனிதர்களையும் குழந்தைகளையும் மிக குரூரமாக படு கொலை செய்ததனர் புலிகள் இந்த வக்கிர நிகழ்வு தற்செயலான ஒன்றாக பார்த்துவிட முடியாது விடுதலை புலிகளின் வலிந்து பெற்றுக்கொண்ட ஓர் போர் தந்திரம் என்று தான் சொல்ல வேண்டும் ஓர் கட்டுக்கோப்பான அமைப்பாக இருந்த புலிகள் தலமையின் உத்தரவை பெறாமல் இந்த மிலேச்சதனமான தாக்குதலை அவ்வளவு நேர்த்தியாக செய்திருக்க முடியாது .பின் நாட்களில் விடுதலை புலிகள் மிக மோசமான அழிவை (பொது மக்கள் அல்ல) சந்தித்தற்க்கு இந்த குரூரமான சம்பவத்திற்க்கு பின்னர் கணவனை இழந்த மனைவியோ ,தகப்பனை இழந்த பிள்ளைகளோ ,பிள்ளைகளை இழந்த பெற்றோர்களோ இட்ட சாபமாகத்தான் இருக்க வேண்டும்.

காத்தான்குடியில் படுகொலை செய்யப்பட்டது முஸ்லீம்கள் என்ற ஒரே காரணத்திற்காக இதனை நான் பதிவு செய்ய வில்லை கொல்லப்பட்ட சக மனிதர்கள் என்ற அடிப்படையிலே எனது கண்டனத்தை பதிவு செய்கிறேன். முள்ளிவாய்க்கால் மனித பேரவல நிகழ்வும் என்னுள் இத்தகய ஓர் உணர்வையே ஏற்படுத்தும். எங்கெல்லாம் அப்பாவி பொது மக்களையும் பெண்களையும் குழந்தைகளையும் கொல்கிறார்களோ அக் கொலைகாரர்களை சபிப்போம்…

Sugan Paris