வெனிசுவேலா: இன்னோர் அந்நியத் தலையீடு

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
அயற்தலையீடுகள் ஆரோக்கியமானவையல்ல; அவை எந்த நியாயத்தின் அடிப்படையில் நிகழ்த்தப்பட்டாலும், ஒரு நாட்டின் இறைமையைக் கேள்விக்குள்ளாக்கும் செயல்கள். ஆனால், உலகெங்கும் அயற்தலையீடுகள் நடந்தவண்ணமுள்ளன. அவை பல்வேறு முகாந்திரங்களின் கீழ் நடந்தேறுகின்றன. அவை வேறுபாடின்றிக் கண்டிக்கப்பட வேண்டியவை.