வேலையைச் சரியாகச் செய்த சாணக்கியன்!

(சீவகன் பூபாலரட்ணம் — அரங்கம் பத்திரிகையிலிருந்து )

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்களின் மற்றுமொரு உரை பல ஊடகங்களில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. சுற்றுலாப் பயணத்துறை அமைச்சு, கப்பல் மற்றும் துறைமுகங்கள் அமைச்சு மற்றும் விமானப்போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி வலயங்கள் ஆகியவற்றுக்கான இராஜாங்க அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் அவர் ஆற்றிய உரையே இங்கு வரவேற்கப்பட்டுள்ளது. இந்த உரை சுமார் 29 நிமிடங்கள் வரை நீட்சியானது.