புதுப்புது அரசியல் குழப்பங்கள்

(மொஹமட் பாதுஷா)

கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாகக் கூறி, நாட்டைப் புதிய இயல்பு நிலைக்குத் திருப்பிய பிறகு, அதைவிடப் பெரிய அரசியல் குழப்பங்கள், நாட்டைத் தொற்றிக் கொள்ள ஆரம்பித்துள்ளன. அரசாங்கம் இவற்றை மறைக்க, என்னதான் பகிரதப் பிரயத்தனங்களை எடுத்தாலும், ‘ஒரு சோற்றுப் பீங்கானுக்குள் முழுப் பூசணிக்காய் போல’, அவையெல்லாம் வெளியில் துருத்திக் கொண்டு தெரிகின்றன.