புளொட் தோழர் சின்ன மென்டிஸ்

இவர் யாழ் மாவட்ட பொறுப்பாளராக பணியாற்றிய காலத்தில் எமது ஊரின் ஒரு பகுதியான வேரக்காடு என்னும் பகுதியில் புளொட் உறுப்பினர்களுக்கு இராணுவப் பயிற்சி அளித்துவந்தனர்.இதை அண்மித்த பகுதியில் இரண்டு சிறு குளங்களும் உன்னிய வயல்வெளி என்னும் பகுதியும் உண்டு. ஒரு நாள் பயிற்சி அளிக்கும்போது இரண்டு உறுப்பினர்கள் பெரியகுளத்தில் தாண்டு மூச்சுத் திணறி மரணமானார்கள்.இவர்கள் புன்னாலைக் கட்டுவன் பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சாதி என அழைக்கப்படும் சமூகத்தில் இருந்து வந்தவர்கள். இவரகளின் மரணம் தொடர்பாக சின்னமெண்டிஸ் சந்தேகம் கொண்டார்.ஏனெனில் அந்தக் குளம் ஆழமற்றது.அதனால் அவர் சந்தேகம் கொண்டார்.பின்னர் இறந்தவர்களின் பின்புலம்,பயிற்சி அளித்தவரகளின் பின்புலம் என்பவற்றை ஆராய்ந்தார்.

அவரின் சந்தேகம் உறுதியானது. 1982 இல் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நடந்த சாதிக்கலவரம்தின் பழிவாங்கல்தான் என்பதை தெளிவுபடுத்துதல் உணர்ந்தார்.பின்னர் பயிற்சி அளித்தவரகளோடு அவர்கள் விரும்பும்பாணியில் உரையாடி அவர்கள் மூலமாக உண்மையை நிரூபித்தார்.

பின்னர் தன் அமைப்பிலுள்ள தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த தோழர்களிடம் வினாவினார்.அவர்களுக்கு உண்மை தெரியும்.சொல்லப் பயந்து இருந்தார்கள்.இதைக் கேட்ட மென்டிஸ் உண்மையில் அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அவர்களுக்கு என்ன தண்டணை கொடுக்கலாம் எனக் கேட்டார்.எல்லோரும் மௌனமானார்கள்.அவருக்கு நிலைமை புரிந்தது.சம்பந்தப்பட்ட பயிற்சியாளர்களை மட்டும் (இருவர்) வைத்துக்கொண்டு மற்றவர்களை போகச் சொன்னார்.

ஒரு சில நிமிடங்களின் பின் எல்லோரையும் அழைத்தார்.அந்த இருவரும் பிணமாக கிடந்தனர் .நமது அமைப்பு செய்ததாக சொல்லப்படும் கொலைகளோடு இவர்களும் சேரட்டும் என்றார்.

இந்த தகவலை எனக்கு சொன்னவர் எமது ஊரைச் சேர்ந்த முன்னாள் புளொட் தோழர்கள்.இது பொய் அல்ல. உண்மைச் சம்பவம்.

மென்டிஸ் ஒரு உண்மையான தேசிய விடுதலைப் போராளி என்பதில் சந்தேகம் இல்லை.தேசிய வாதம் பேசும் எத்தனை பேருக்கு இந்த மாதிரியான விசயங்களில் துணிவாக முடிவெடுக்க முடியும்.

இவரைக் கொன்ற புலிகளையும் புளொட் அமைப்பினர் இப்போது புகழ்வது கேவலமானது.

நிராயுதபாணியாக சாகும்வரை களத்தில் நின்ற இவர் போராளிதான்

(Vijay Baskaran)