உக்ரேனுக்கு எதிராக போலந்து விவசாயிகள் போராட்டம்

உக்ரேன் மீது ரஷ்யா தனது முழு அளவிலான இராணுவ நடவடிக்கையை தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. போர் தொடங்கியதில் இருந்தே அண்டை நாடான போலந்து, உக்ரேனுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடான போலந்து, உக்ரேனில் இருந்து வந்த அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததுடன், உக்ரேனுக்கு ஆயுதங்களையும் வழங்கியது.