சங்கரய்யா ஒரு நூற்றாண்டின் சகாப்தம்

(சாகரன்)

இந்திய கம்யூனிஸ்ட் உலகத்தின் சகாப்தம் சங்கரய்யா என்றால் மிகையாகாது. இந்தியாவில் இன்னமும் சமூக நீதியும் இட ஒதுக்கீடும் சமத்துவமும் பேசப்படுகின்றது… அவை உயிர்வாழ்கின்றன…. இவை அடுத்த கட்டங்களுக்கு முன்னோக்கி நகர்ந்து செல்கின்றன என்றால் இதற்கான முக்கிய காரணங்களாக இந்த கம்யூனிஸ்ட்கள் திகழ்கின்றனர்.